சனி, 30 ஜனவரி, 2016

தவளைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;
*
குளத்து நீரில் விளையாட்டு
தாமரை இலையின் கீழ்
கூட்டமாய் தவளைகள்.
*
Water tank in the game
Under the lotus leaf
Frogs mass.

*

வெள்ளி, 29 ஜனவரி, 2016

கடிதல்...!! ( ஹைபுன் )


அவன் என்ன தவறு செய்துவிட்டான் என்று தெரியாது? உடனே உனக்கு மூளையிருக்கா? என்ன இப்படி செய்துவிட்டாய்? என்று கடிந்துக் கொள்கிறார்கள். அப்படியென்றால் மூளையின் செயல்பாடு குறைவு என்றுதானே அர்த்தம். அதன் செயல்பாட்டிற்குக் காரணம் சுரப்பிகளின் செயலின்மை முக்கிய காரணமாகத் திகழ்கின்றது. அதனால் தான் பலருக்கும் மூளைவளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படக் காரணமென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இம்மூளை வளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் மருத்துவ சிகிச்சைப் பெற்றும் / பெறாமலும் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து திட்டுவதும் ஏளனமாகக் கேலி செய்வதும் ஏற்புடைய செயலாகுமா?
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்தச் சம்பவங்கள்.
*

வியாழன், 28 ஜனவரி, 2016

நினைப்பு...!! ( ஹைக்கூ )

கைக் கூடி வந்த பின்
எதையோ செய்யத் தூண்டுகிறது
ஏதோவொரு அதீத நினைப்பு.
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்தச் சம்பவம்.

*                                                            

வெள்ளி, 22 ஜனவரி, 2016

அரட்டை...!! ( ஹைக்கூ )

Senryu – Tamil / English.
*
நெல்லிக்காய் விற்கும் பாட்டியிடம்
அரட்டை அடிப்பதில்                     
பள்ளி சிறுவர்களுக்கு சந்தோஷம்.
*
Gooseberry sells grandmother
Chat beatings
School of happy children.

*

புதன், 20 ஜனவரி, 2016

உருவங்கள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / Eng;lish;.
*
உருவங்களை உருவாக்கி
பூங்காவை  அழகு  படுத்தினான்
புல்  செதுக்கும்  மனிதன்
*
Creating images
Park beauty made
Grass man carve.
*.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

வாசிப்பில் ரசித்த வைரவரிகள்...!!


*
தாகூரின் “ ஹைக்கூ “ கவிதைகள் சீனமொழியில் 1920-களிலே மொழியாக்கம் செய்யப்பட்டன. இன்றும் சீனாவில் இனம்கவிஞர்களுக்கு தாகூரின் கவிதைகளே வழிகாட்டுபவையாக இருக்கின்றன என்கிறார்கள். தாகூரின் “ ஹைக்கூ “ கவிதைகளில் நாற்பதுக்கும் மேற்பட்டவை “ செம்மலர் ” ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாளால் மொழியொக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. மீதமிருக்கும் கவிதைகளையும் அவர் மொழிபெயர்த்து தனிநூலாக வெளியிட்டால் தமிழ் இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பாக இருக்கும்.
எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன் – வீடில்லாப் புத்தகங்கள் – தொடர்.  
தி இந்து - ஜனவரி 8, 2015..
தகவல் : ந.க.துறைவன்.
*

வெள்ளி, 15 ஜனவரி, 2016

அனுபவம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;.
*
அலைந்து தேடுவதல்ல
உள்உணர்ந்து அறிவதே
அனுபவம்.
*
Wandering tetuvatalla
Reformulated ulunarntu
Experience.

N.G.Thuraivan.

அனுபவம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English;.
*
அலைந்து தேடுவதல்ல
உள்உணர்ந்து அறிவதே
*
அனுபவம்.
Wandering tetuvatalla
Reformulated ulunarntu
Experience.

*

வியாழன், 14 ஜனவரி, 2016

வாழ்த்துக்கள்...!

சூரியனின் சுகப் பயணத்தால் உலகமெலாம் சுகம் பெறட்டும்.
மகரசங்கராந்தி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நண்பர்களே – ந.க.துறைவன்.

புதன், 13 ஜனவரி, 2016

சிவலிங்கம்...‘‘ ( ஹைக்கூ )

மார்கழி – 59.
யார் கண்டுகளிக்கவோ?
பனிக்காலை வனவெளியில்
தோகை விரித்தாடுகிறது மயில்
*
மார்கழி – 60.
பார்த்துக் களித்திருக்கேன்
நாகலிங்கப் பூவிற்குள்
அரூபச் சிவலிங்கம்.
*


செங்கரும்பு...!! ( ஹைக்கூ )

மார்கழி – 57.
மலையை மறைத்தது மூடுபனி
தத்துவ அறிவால்
மனதை மறைத்தது மாயை.
*
மார்கழி – 58.
ஆண்மையின் குறியீடாய்
அமோகமாய் விளைந்திருக்கு
மன்மதன் வில் செங்கரும்பு 

*

செவ்வாய், 12 ஜனவரி, 2016

அணில்பிள்ளைகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 55
ஈரத் தென்னம் மட்டையில்
மார்கழி பனியில் விளையாடும்
அழகான அணில்பிள்ளைகள்.
*
மார்கழி – 56.
வீட்டிற்குள் போட்டாள் அம்மா
பூசைக்குச் சாம்பிராணிப்புகை
வெளியெங்கும் பனிப்புகை.
*

சூரியகாந்திப்பூக்கள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 53.
நிலமெல்லாம் மஞ்சள் வண்ணம்
பனியில் நடுங்கின சூரியகாந்திப்பூக்கள்
சூரியனைப் பார்த்ததும் புன்சிரிப்பு.
*
மார்கழி – 54.
அச்சமா வெட்கமா பயமா?
உருகி மறைகின்றன
சூரியனைக் கண்ட பனித்துளிகள்.

*

பொன்வண்டுகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 51.
அங்குமிங்கும் பனிக்குளிரில் பறந்து
போக்கு காட்டுகிறது துணைதேடி
பொல்லாதப் பொன்வண்டுகள்.
*
மார்கழி – 52
எங்கு போக அவசரமோ?
உடல் முழுக்க ஈரம்
பனியில் நனைந்தப் பறவைகள்.

*

வெள்ளி, 8 ஜனவரி, 2016

சிலையழகு...!! ( ஹைக்கூ )

மார்கழி – 47.
தொப்பை விநாயகரைச் சுமந்து
பனியில் நனைந்து போகிறது
சிரித்துக் கொண்டே சுண்டெலி.
*
மார்கழி – 48.
வீபூதி குங்குமம் பனியில் கரைந்து
அசுத்தமாக்கி விட்டன
கல்தூண்களின் சிலையழகு.

*

கோபியர்கள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 45
குழலூதி மயக்குவான் கண்ணன்
விளையாடி மகிழும் 
அரூபப் பெண் கோபியர்கள்                       
*
மார்கழி – 46.
இன்ப ஊற்றின் மணற்கேணி
இயற்கையின் உயிர்துளியோ?
பனித்துளி நாதவிந்து

*

புதன், 6 ஜனவரி, 2016

கருணை...!! ( ஹைக்கூ )

மார்கழி – 43
மலைப்பாதைச் சுற்றும் பக்தர்கள்
வேடிக்கைப் பார்க்கின்றது
மார்கழி பௌர்ணமி நிலா.
*                                          
மார்கழி – 44.
கன்னியர்கள் பிரார்த்தனைக்கு
கருணை செய்வாளா?
கல்யாணக் காமாட்சி.

*

செவ்வாய், 5 ஜனவரி, 2016

கருவண்டுட...!! ( ஹைக்கூ )

மார்கழி – 41.
*
காஞ்சியில் ஆட்சி புரிபவளே
காமாட்சி உன் கையில்
செங்கரும்பு செங்கோலே பேரழகு.
*
மார்கழி – 42.
*
காமனை எரித்தான் சிவன்
சாந்தம் அடைந்தாயோ?
கருவண்டு விழியாளே காமாட்ச

*

திங்கள், 4 ஜனவரி, 2016

கிளியழகு...!! ( ஹைக்கூ ீ

மார்கழி -39.
*
எதற்காக வெட்டவெளி பாதையில்
பனியில் நின்றிருக்கிறாய்?
சளி பிடிக்கப் போகிறது ஆஞ்சநேயா!!
*
மார்கழி  40.
*
சொக்கனுக்கு மணவாட்டி
சொக்க வைக்குதடி மீனாட்சி
உன் தோளில் கிளியழகு.

*

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அழகின் உறவு...!!! ( ஹைபுன் )


*
அழகின் உறவு…!!
*
இலையுதிர்காலத்தில் மரங்களிலிருந்து பசுமையான பொன்னிறமான இலைகள் அழகிய வண்ணங்களில் வாழ்வை அனுபவித்து விட்டு உதிர்ந்துவிடுவது எவ்வளவு அழகானது. அவ் வசந்தக்காலப் பூக்களின் நறுமணம் காற்றில் கலந்து எத்தனை ரம்மியமான சூழலை உருவாக்கி விடுகிறது? கீழே உதிரும் இலைகள் காற்றில் உருண்டு உருண்டு செல்வதைப் பார்க்கப் பார்க்க எத்தனை ஆசைக் கொள்கிறது மனம்?. பூக்கள் காய்கள் புழு பூச்சி எறும்புகளுக்கு நித்தம்  சுவையான இலவச உணவாகின்றன. பறவையினங்கள் இயற்கையின் எழில்கொஞ்சும் அழகின் உறவில் வாழ்நாளை இனிமையாக  வாழ்ந்து மகிழ்ந்து கழிக்கின்றன.
*
இயற்கைச் சூழல் கேடு
மனிதன் இழைக்கும் கொடுமை
எதிர்கொள்கின்றன பறவைகள்.

*

பூமலைகள்...!! ( ஹைக்கூ )

மார்கழி – 37.
*
எந்த ஆண்டவனை, ஆசாமிகளை
அலங்கரிப்போமென்று பனியில்
ஈரமாய் தொங்கும் பூமாலைகள்.
*

மார்கழி – 38.
*
பனிக்குளிரில் எரியும் நெய்விளக்கு
நோ்த்தி கடன் செய்வார்கள்
கல்யாணம் வரம்கேட்டு கன்னியர்கள்

*               

சனி, 2 ஜனவரி, 2016

பூசணிப்பூ...!!( ஹைக்கூ )

மார்கழி – 35
*
பூ காய்கறி வாழையென
சுமந்து நகர்வந்த தாய்மாரின்
உழைப்பை உணர்வாயோ கோவிந்தா!!
*
மார்கழி – 36
*
உள்வீட்டில் உட்பூசல்கள்
வெளிப்புறத்துக் கொல்லையிலே
மங்கலமாய் பூத்திருக்குப் பூசணிப்பூ.
*

வெள்ளி, 1 ஜனவரி, 2016

பசு...!! ( ஹைக்கூ )

*
மார்கழி – 33
*
அசைப்போட்டு நின்றிருக்கும் பசு
கன்று பின் துள்ளி நிற்கும்
மடிபிடித்து கறப்பான் பால்காரன்.
*
மார்கழி – 34.
*                                                
ஈர வைக்கோல்கள்
தவிட்டு நீருண்டு
பசிதீர்க்கும் ஆவினங்கள்.

*